அப்பாவை பறிகொடுத்த சோகத்தோடு தேர்வை முடித்து வந்த +2 மாணவன்.. "அண்ணா.." கட்டிப் பிடித்து கதறியழுத தங்கை
நெஞ்சை பிழியும் காட்சிகள்
உடல் நலக்குறைவினால் தந்தை உயிரிழந்த நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் பரீட்சைக்கு வந்த சம்பவம் சக மாணவர்களை கண்கலங்க வைத்தது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் சிறுநீரக பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் அவரது மகன் கதிரவன், தந்தை இறந்த சோகத்திலும் ஆங்கிலத் தேர்வு எழுத வந்திருந்தார். தேர்வு முடிந்து வீடு சென்ற அண்ணனை, தங்கை கட்டிபிடித்து கதறி அழுத காட்சி அனைவரையும் கண்கலங்கச் செய்தது.