டெல்லியுடன் இன்று மோதும் பஞ்சாப்.. புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறுமா?

Update: 2025-05-24 03:20 GMT

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 66வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதவுள்ளன. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. டெல்லி அணி ஏற்கனவே எலிமினேட் ஆகிவிட்ட சூழலில், தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய இன்று முயற்சிக்கக்கூடும். பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்ட பஞ்சாப் அணி, இன்று வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற முனைப்பு காட்டும்.

Tags:    

மேலும் செய்திகள்