"அவர கொடுத்தா தான் சாம்சன கொடுப்போம்" - CSK-வின் அடிமடியிலே கை வைத்த RR

Update: 2025-08-14 07:00 GMT

சாம்சனுக்காக ருத்துராஜ் அல்லது ஜடேஜாவை கேட்ட ராஜஸ்தான்?

ராஜஸ்தான் அணி சஞ்சு சாம்சனுக்கு மாற்றாக சிஎஸ்கேவிடம் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாடை கேட்டதாக தகவல் பரவி வருகிறது.

ராஜஸ்தான் அணியின் கேப்டனாக உள்ள சஞ்சு சாம்சன் அந்த அணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும், அவரை TRADE முறையில் சிஎஸ்கே வாங்க முயன்று வருவதாகவும் நீண்ட நாட்களாக தகவல் பரவி வருகிறது.

இந்த சூழலில், ராஜஸ்தான் அணி சஞ்சு சாம்சனை சிஎஸ்கேவிற்கு டிரேட் செய்தால், அவருக்கு மாற்று வீரராக சிஎஸ்கே கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் அல்லது ரவீந்திர ஜடேஜா அல்லது ஷிவம் துபேவை தருமாறு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பிரபல CRICBUZZ தளத்தில் கூறப்பட்டுள்ளது.

எனினும், இதில் எந்த கோரிக்கைக்கும் சிஎஸ்கே சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்