டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் 4வது லீக் போட்டியில் மதுரையை 6 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் வீழ்த்தியது. கோவையில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மதுரை, 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அதீக் உர் ரஹ்மான் (Atheeq Ur Rahman) 38 ரன்கள் எடுத்தார். அடுத்து 165 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சேலம் அணியில் நிதிஷ் ராஜகோபால் 60 ரன்களும் கவின் 48 ரன்களும் எடுத்தனர். இதனால் 19வது ஓவரில் இலக்கை எட்டிய சேலம், 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.