TNPL 2025 | சேலம் அணியை பந்தாடி முதல் அணியாக பிளே-ஆஃப் சென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
TNPL 2025 | சேலம் அணியை பந்தாடி முதல் அணியாக பிளே-ஆஃப் சென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் சேலத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே-ஆஃப் சுற்றுக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முன்னேறியுள்ளது.
சேலத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் கேப்டன் பாபா அபரஜித் (Baba Aparajith) பவுலிங் தேர்வு செய்தார்.
தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. சேப்பாக் தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் பிரேம்குமார் (Prem Kumar) 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து 161 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சேப்பாக் அணியில் ஆஷிக் (Aashiq) - மோஹித் ஹரிஹரன் ( Mokit Hariharan ) தொடக்க ஜோடி அதிரடியாக ஆடியது. 32 ரன்களில் மோஹித் ஹரிஹரன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜெகதீசன் ஆஷிக்குடன் பார்ட்னர்ஷிப் (partnership) அமைத்தார்.
ஆஷிக்கும் ஜெகதீசனும் அரைசதம் அடித்து அசத்திய நிலையில் 17வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இலக்கை எட்டிய சேப்பாக், 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நடப்பு டி.என்.பி.எல் தொடரில் தொடர்ச்சியாக 5வது வெற்றியை சேப்பாக் பதிவு செய்துள்ளது.
இதன்மூலம், 10 புள்ளிகளுடன் முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி சேப்பாக் அசத்தியுள்ளது