ODI-ல் அதிவேக அரைசதம் - உலக சாதனையை சமன் செய்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேக அரைசதம் சாதனையை வெஸ்ட் இண்டீஸ் வீரர் மேத்யூ ஃபோர்டு (Matthew Forde) சமன் செய்துள்ளார். டூப்ளினில் நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 8 சிக்சர்களைப் பறக்கவிட்ட மேத்யூ ஃபோர்டு வெறும் 16 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதன்மூலம் கடந்த 2015ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் (DEVILLIERS) 16 பந்துகளில் அரைசதம் அடித்து உலக சாதனை படைத்ததை மேத்யூ ஃபோர்டு சமன் செய்தார். இந்தப் போட்டியில் 19 பந்துகளில் 58 ரன்கள் அடித்து அவர் ஆட்டமிழந்தார்.