IPL-ல் வெளியேறியது 3வது அணி.. டேபிள் டாப்பராக இருந்த டெல்லிக்கே இந்த நிலையா?

Update: 2025-05-06 03:43 GMT

டெல்லி - ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி, மழையால் ரத்தானது. ஐபிஎல் தொடரின் 55வது போட்டி ஹைதராபாத் - டெல்லி அணிகளுக்கு இடையே ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி, ஐதராபாத்தின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே எடுத்த‌து.

டெல்லி அணி முதல் இன்னிங்ஸை விளையாடி முடித்த நிலையில், மழை பெய்ததால் ஆட்டம் தொடர முடியாமல் போனது. மைதானம் ஈரப்பதமாகவே இருந்த‌தால், ஐதராபாத் அணி ஒரு பந்தை கூட எதிர்கொள்ளாத‌ நிலையில், ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டன. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் சன்ரைசர்ஸ் அணி ஒரு இடம் முன்னேறினாலும், ப்ளேஆஃப் வாய்ப்பை இழந்த‌து. அத்துடன், ஐபிஎல் தொடரில் இருந்தும் நாக் அவுட் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்