Ashes Test | மாயாஜாலம் செய்த ஸ்டார்க்குக்கு கொஞ்சமும் மிச்சம் வைக்காமல் திருப்பி கொடுத்த ஸ்டோக்ஸ்

Update: 2025-11-22 05:08 GMT

மாயாஜாலம் செய்த ஸ்டார்க்குக்கு கொஞ்சமும் மிச்சம் வைக்காமல் திருப்பி கொடுத்த ஸ்டோக்ஸ்

ஆஷஸ் தொடரின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் சீட்டுக்கட்டு சரிவது போன்று விக்கெட்டை பறிகொடுத்தன.

வரலாற்று சிறப்புமிக்க "ஆஷஸ் தொடர் பெர்த்தில் மைதானத்தில் தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி தங்களின் ''bazball" ஆட்டத்தை வெளிகாட்ட பேட்டிங்கை தேர்வு செய்தது.

இருப்பினும், தொடக்கம் முதலே தனது அசத்தலான பந்து வீச்சால் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் மிட்செல் ஸ்டார்க் ஆஷஸ் தொடரில் தனது 100வது விக்கெட்டை பதிவு செய்து சாதனை படைத்தார்.

மேலும், முதல் இன்னிங்ன்ஸின் முடிவில் இங்கிலாந்து அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணியும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித்தின் ஆட்டம் 17 ரன்களுக்குள் முடிந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

முதல் நாள் ஆட்ட முடிவில் 123 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ள ஆஸ்திரேலிய அணி 49 ரன்கள் பின்னடைவில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்