ஸ்ரேயாஸ் ஐயர் Vs விராட் கோலி.. "இதயத்தை நொறுக்கும்".. ராஜமெளலி போட்ட ட்வீட்
IPL இறுதிப்போட்டியில் பஞ்சாப் பெங்களூரு அணிகளில் யார் வென்றாலும் அது நம் இதயத்தை நொறுக்கப் போவது உறுதியென இயக்குனர் ராஜமெளலி தெரிவித்துள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த 11 ஆண்டுகளில் மூன்று வெவ்வேறு அணிகளை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றதை சுட்டிக்காட்டிய அவர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோலி 18 ஆண்டுகளாக விளையாடி ஆயிரக்கணக்கான ரன்களை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இருவரும் கோப்பைக்கு தகுதியானவர்கள் என்பதால் இதில் எவர் தோற்றாலும் அது நம் இதயத்தை நொறுக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.