இந்தியாவுக்கு எதிரான 4வது டி.20 போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான டிம் செய்ஃபெர்ட் (Tim seifert) 62 ரன்கள், கான்வே 44 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். கடைசி நேரத்தில் மிச்செல் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார்.