இந்தியா, நியூசிலாந்து இடையேயான 4வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இந்தப்போட்டி, இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக இந்திய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே 3 போட்டிகளில் வென்று தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, அதே உத்வேகத்துடன் களமிறங்கும். அதேநேரம், தோல்விகளில் இருந்து மீள நியூசிலாந்து அணியினர் வியூகம் வகுப்பார்கள் என்பதால், இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.