இந்திய மகளிர் அணி உலகக்கோப்பையை வென்றபோது, ஆடவர் அணி முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா எமோஷனலாக காணப்பட்டார். 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நவம்பர் மாதம், ரோகித் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பை ஃபைனலில் தோற்றது. இந்நிலையில் அந்த தோல்விக்கு ஈடுகட்டும் விதமாக நவம்பர் மாதத்தில் இந்திய மகளிர் அணி உலகக்கோப்பையை வென்றுள்ள நிலையில், போட்டியை நேரில் பார்த்த ரோகித் சர்மா சில வினாடிகள் உணர்ச்சிப் பெருக்குடன் இருந்தார்