Smriti Mandhana | Virat Kohli | கோலி ரெக்கார்டை பிரேக் செய்து மிரளவிட்ட ஸ்மிருதி மந்தனா
விராட் கோலியின் சாதனையை பின்னுக்கு தள்ளிய ஸ்மிருதி மந்தனா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், 50 பந்துகளில் சதம் அடித்து, அதிவேகமாக சதமடித்தவர் என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்தார். இந்த சதத்தின் மூலம், இந்தியாவுக்கான ஆடவர் மற்றும் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். விராட் கோலி 52 பந்துகளில் சதம் அடித்திருந்த நிலையில், 50 பந்துகளில் சதம் அடித்து, அவரது 12 ஆண்டுகால சாதனையை ஸ்மிருதி மந்தனா முறியடித்தார்.