Ind Vs Sa | T20 Cricket | India Squad | T20 அணியை அறிவித்த பின் BCCI வைத்த எதிர்பாரா ட்விஸ்ட்

Update: 2025-12-04 03:11 GMT

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகளை கொண்ட தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் , தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி இருந்த சுப்மன் கில் துணை கேப்டனாகவும் செயல்படுகின்றனர். இருப்பினும் சுப்மன் கில் விளையாடுவது அவரது உடற்தகுதியை பொறுத்தது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய அணியில் அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஷிவம் துபே, அக்சர் படேல், விக்கெட் கீப்பர்களான ஜிதேஷ் சர்மா , சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ரானா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். காயத்தில் இருந்து மீண்டுள்ள சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா திரும்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்