Rafael Nadal | Tennis | Retired ஆகியும் விருது மழையில் நனையும் ரஃபேல் நடால்
22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற டென்னிஸ் வீரர் ரஃபேல் நடாலுக்கு, ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடந்த விழாவில் AS லெஜண்ட் விருது' வழங்கப்பட்டது. அந்த விழாவில், நடாலுடன் ஏழு முறை மோட்டோ ஜிபி சாம்பியன் ஆன மார்க் மார்க்வெஸ், இண்டி 500 வெற்றியாளர் அலெக்ஸ் பலூ ஆகியோரும் விருதுகளைப் பெற்றனர். கால்பந்து நட்சத்திரங்களான ரஃபேல் வரேன், ஜீசஸ் நவாஸ், ஃபெர்னாண்டோ டோரஸ் மற்றும் ரவுல் ஆகியோருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. பேட்மிண்டன் வீராங்கனை கரோலினா மரின் பாசிட்டிவ் ஸ்போர்ட் விருதைப் பெற்றுள்ளார்