ஐபிஎல் 10வது லீக் போட்டில ஹைதராபாத்துக்கு எதிரா 7 விக்கெட் வித்தியாசத்துல டெல்லி அபார வெற்றி பெற்று இருக்கு,...
விசாகப்பட்டினத்துல நடந்த இந்த போட்டில முதல்ல பேட்டிங் பன்ன ஹைதராபாத்தோட முன் வரிசை வீரர்கள் விக்கெட்ட காலி பண்ணி கதிகலங்க வச்சாரு மிட்ச்செல் ஸ்டார்க் Mitchell Starc...
விக்கெட்டுகள இழந்து ஹைதராபாத் தடுமாறுனப்போ, இளம் வீரர் அனிகேத் வர்மா Aniket Verma அசால்ட்டா பவுண்டரிகள விளாசுனாரு....
41 பந்துல 6 சிக்சர்களோட அனிகேத் வர்மா Aniket Verma 74 ரன் அடிக்க, 19வது ஓவர்ல 163 ரன்னுக்கு ஹைதராபாத் ஆல்-அவுட் ஆச்சு... டெல்லி தரப்புல மிட்ச்செல் ஸ்டார்க் Mitchell Starc 5 விக்கெட்டுகள வீழ்த்தி மிரட்டுனாரு...
அடுத்து 164 ரன் இலக்க நோக்கி பேட்டிங் பன்ன டெல்லி அணிக்கு டூபிளஸ்ஸி du Plessis -ஃப்ரேஸர் மெக்கர்க் Fraser-McGurk ஜோடி அதிரடி தொடக்கம் தந்துச்சு...
டூபிளஸ்ஸி du Plessis அதிரடி அரைசதம் அடிச்சு அவுட் ஆக, மெக்கர்க் McGurk 38 ரன்ல கேட்ச் ஆனாரு. அடுத்து வந்த அபிஷேக் போரெல்லும் Abishek Porel பவுண்டரிகள பறக்கவிட டெல்லி வெற்றி உறுதியாச்சு...
கே.எல்.ராகுல் விரைவா 15 ரன் எடுத்து போல்டான நிலைல, அபிஷேக் போரெல் Abishek Porel -டிரிஸ்டன் ஸ்டப்ஸ் Tristan Stubbs ஜோடி, 16வது ஓவர்ல 3 விக்கெட்டுகள இழந்த நிலைல டெல்லிய இலக்க கடக்க வச்சாங்க.... 7 விக்கெட் வித்தியாசத்துல அபார வெற்றி பெற்றுச்சு டெல்லி....