ஜஸ்ட் மிஸ்ஸான முச்சதம்.. கிரிக்கெட் உலகை திரும்பிப் பார்க்க வைத்த கில்

Update: 2025-07-04 04:43 GMT

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது.

பர்மிங்காம்  நகரில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் 2வது நாள் ஆட்டத்தில் இந்தியா ரன் குவிப்பில் ஈடுபட்டது. அபாரமாக விளையாடிய கேப்டன் சுப்மன் கில் இரட்டைச் சதம் விளாசினார். முச்சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 269 ரன்களில் கில் ஆட்டமிழந்தார். முன்னதாக ஜடேஜா 89 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 42 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இதனால், முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 25 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பென் டக்கெட்டும் ben ducket, ஓலி போப்பும் olie pope ஆகாஷ் தீப் akash deep பவுலிங்கில் டக்-அவுட் ஆகினர். கிராலியை Crawley19 ரன்களில் சிராஜ் வெளியேற்றினார். 4வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் Joe Root - ஹாரி ப்ரூக் Harry Brook இணை நிதானமாக ஆடியது. 2ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட இங்கிலாந்து 510 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் 3ம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்