ஜூனியர் தெற்காசிய கால்பந்து - இந்திய பெண்கள் அணி சாம்பியன்

Update: 2025-09-01 04:03 GMT

பூட்டானில் நடைபெற்ற, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் தெற்காசிய கால்பந்து தொடரில் இந்திய பெண்கள் அணி, சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. இந்த தொடரில் நடைபெற்ற 4 அணிகளும் தங்களுக்குள் இருமுறை மோதின. இதில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியிடம் 3க்கு 4 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியைத் தழுவியது. இருப்பினும், ஏற்கெனவே முதல் 5 போட்டிகளில் இந்தியா தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருந்ததால், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Tags:    

மேலும் செய்திகள்