IPL 2025 | ``CSK தொடர் தோல்விக்கு நானே பொறுப்பு'' | மனம் நொறுங்கி பேசிய ஸ்டீபன் ஃபிளெமிங்

Update: 2025-04-26 15:22 GMT

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் தோல்விக்கு தான் பொறுப்பேற்பதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான வாழ்வா சாவா போட்டியில் சி.எஸ்.கே தோல்வியடைந்தது. போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஃபிளெமிங், ஏலத்தில் பிற அணிகள் சிறப்பாக செயல்பட்டன, ஆனால் தங்களால் அதைச் சரியாகப் செய்ய முடியவில்லை என தெரிவித்தார். மேலும் தொடர் தோல்விக்கு முதலில் தான் பொறுப்பேற்பதாக கூறிய அவர், வீரர்கள் தங்கள் செயல்திறன் நிலைகளை உயர்த்தி கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்