IPL 2025 | மொத்த கிரவுண்டையும் விண்ணை பார்க்கவைத்து சொன்னதை செய்து காட்டிய மக்களின் கேப்டன்
சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பஞ்சாப் முன்னேறி உள்ளது. கடைசியாக கடந்த 2014ம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் விளையாடி இருந்தது. இதனிடையே, ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 200க்கும் அதிகமான ரன்கள் அடித்து டிஃபென்ட் (defend) செய்ய முடியாமல் மும்பை அணி தோல்வி அடைந்துள்ளது. முன்னதாக 18 போட்டிகளில் இதுபோல் மும்பை வென்று இருந்த நிலையில் மும்பையின் தொடர் வெற்றிப் பயணத்திற்கு பஞ்சாப் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.