IND vs ENG | சபதம் எடுத்து கிரவுண்டுக்கு செல்லும் இந்தியா - இதுதான் நமக்கு இருக்க ஒரே வாய்ப்பு
மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை = இந்தியா -இங்கிலாந்து பலப்பரீட்சை மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் 20வது போட்டியில் இந்தியா- இங்கிலாந்து மகளிர் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு போட்டி துவங்குகிறது. ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியை தழுவிய இந்திய அணி, இந்த போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. நிச்சயம் நாங்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவோம் என இந்திய அணியின் திருஷ் காமினி நம்பிக்கை தெரிவித்துள்ளார். புள்ளிகள் பட்டியலில் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ள இங்கிலாந்து, பலம்வாய்ந்த அணியாக வலம் வருவதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.