கங்குலி, டிராவிட், கோலி வரிசையில் சாய் சுதர்சன்..முதல் போட்டியிலேயே ரசிகர்களுக்கு ஏமாற்றம்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் அறிமுகமான அதே நாளில் தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சுதர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார். லீட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்திய அணியின் முன்னாள் வீரர் புஜாரா அவருக்கு டெஸ்ட் அணிக்கான தொப்பியை வழங்கி கவுரவித்தார். இந்திய டெஸ்ட் அணியில் 317வது வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், விராட் கோலி அறிமுகமான அதே ஜூன் 20ஆம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் காலடி வைத்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி பலரும் சாய் சுதர்சனை வாழ்த்தினர். எனினும், முதல் இன்னிங்ஸில் டக்-அவுட்டாகி சாய் சுதர்சன் ஏமாற்றம் அளித்தார்.