காமன்வெல்த் பளுதூக்குதல் - தங்கம் வென்று அசத்திய இந்திய வீராங்கனை
காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் 17 வயது வீராங்கனை கோயல் பார் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியின் மகளிர் ஜூனியருக்கான 53 கிலோ எடைப் பிரிவில் கோயல் பார் பங்கேற்றார். இதில் SNATCH சுற்றில் அதிகபட்சமாக 85 கிலோ எடையை தூக்கிய கோயல், CLEAN AND JERK பிரிவில் 107 கிலோ என மொத்தம் 192 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றார்.
மேலும், ஜூனியர் பிரிவில் 192 கிலோ எடை தூக்கிய முதல் வீராங்கனை என்ற சாதனையையும் கோயல் பார் படைத்துள்ளார்.