சாம்பியன்ஸ் டிராபி.. பாகிஸ்தானில் இருந்து வந்த அதிர்ச்சி தகவல் - பீதியில் Fans
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெறும் பாகிஸ்தானில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், போட்டிகளைக் காண வந்துள்ள வெளிநாட்டினரைக் கடத்த அங்குள்ள பயங்கரவாத அமைப்புகள் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக அந்நாட்டு உளவு அமைப்பு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் போட்டி நடைபெறும் இடங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.