Asia Cup 2025 | பாகிஸ்தான் அமைச்சருடன் கைகுலுக்கிய சூர்யகுமார் யாதவ் - வைரலாகும் வீடியோ
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கிய நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் வைத்து கோப்பையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும் அமைச்சருமான மொஹ்சின் நக்வி மற்றும் தொடரில் பங்கேற்கும் எட்டு நாடுகளைச் சேர்ந்த கேப்டன்கள் கலந்து கொண்டனர். பிறகு கோப்பையுடன் அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். முன்னதாக இந்த நிகழ்வின்போது, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரான பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வியுடன் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்கிய புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி உள்ளது.