Asia Cup 2025 | 41 ஆண்டுகளில் முதல்முறை.. பழி வாங்க துடிக்கும் பாக்., ஓட ஓட அடிக்க தயாரான இந்தியா
17-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத இந்தியாவை 41 ஆண்டுகளுக்கு பின் ஆசிய கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி சந்திக்க உள்ளது. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இரு அணிகளும் இறுதி போட்டியில் மோத உள்ளதால் ஆட்டத்தின் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.