இதுவரை பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி பங்கேற்ற ஆஷஸ் தொடரில் வெற்றி முகத்தையே கண்டுள்ளது. மேலும், தற்போது நடந்து வரும் தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ள நிலையில், கம்மின்ஸின் வருகை அணிக்கு மிகப்பெரிய பலமாகக் கருதப்படுகிறது.
ஆஷஸ் 3வது டெஸ்ட் - ஆஸ்திரேலியா அணி
==================================================
பாட் கம்மின்ஸ் (கேப்டன்)
ஸ்காட் போலாண்ட்
அலெக்ஸ் கேரி
பிரண்டன் டக்கெட்
கேமரன் கிரீன்
டிராவிஸ் ஹெட்
ஜோஷ் இங்கிலிஸ்
உஸ்மன் கவாஜா
மார்னஸ் லெபுஷன்
நாதன் லியன்
மைக்கேல் நேசர்
ஸ்டீவன் ஸ்மித்
மிச்செல் ஸ்டார்க்
ஜேக் வெதரால்ட்
இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 17 ஆம் தேதி, அடிலைட் ஓவல் (adelaide oval) ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
ஆஷஸ் 3வது டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் (pat cummins)மீண்டும் களம் இறங்குகிறார். அடிலைட்டில் (adelaide) நடைபெற உள்ள 3வது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் முழு பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. காயத்தால் நீண்ட நாட்கள் அணியில் இருந்து விலகியிருந்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் காயத்தில் இருந்து மீண்டு கேப்டனாக களமிறங்குகிறார். அணியில் ஸ்காட் போலாண்ட் (scott boland), அலெக்ஸ் கேரி (alex carey), பிரண்டன் டக்கெட் (brendan doggett), கேமரன் கிரீன் (cameron green), டிராவிஸ் ஹெட் (travis head), ஜோஷ் இங்கிலிஸ் (josh inglis), உஸ்மன் கவாஜா (usman khawaja), மார்னஸ் லெபுஷன் (marnus labuschagne), நாதன் லியன் (nathan lyon), மைக்கேல் நேசர் (michael neser), ஸ்டீவன் ஸ்மித் (steven smith), மிச்செல் ஸ்டார்க் (mitchell starc), ஜேக் வெதரால்ட் (jake weatherald), மற்றும் பியூ வெப்ஸ்டெர் (beau webster) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.