இந்திய ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கலந்த அதிர்ச்சி

Update: 2025-07-18 03:05 GMT

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடுவார் என்று இந்திய துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த தொடரின் 3 போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என்று முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே முதல் மற்றும் 3-வது போட்டிகளில் அவர் விளையாடி விட்டதால் மீதமுள்ள 2 போட்டிகளில் எந்த ஒன்றில் பும்ரா விளையாடுவார் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இந்நிலையில், தொடரின் முக்கிய கட்டத்தை கருத்தில் கொண்டு, 4-வது டெஸ்டில் பும்ரா விளையாடுவது குறித்து முடிவெடுப்போம் என்று இந்திய அணியின் துணை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்