அரசுக்கு எதிராக போராட்டம் - துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி.. கலவரமான நேபாளம்
அரசுக்கு எதிராக போராட்டம் - துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி.. கலவரமான நேபாளம்
நேபாளத்தில் சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டதற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், ஒருவர் உயிரிழந்ததாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்தது. கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் பதிவு செய்ய தவறியதற்காக, இந்தத் தடை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதற்கு எதிராக பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், இளைஞர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கினர். நேபாள வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய படி பேரணியாக சென்றனர். இதில் போராட்டக் காரர்களை நோக்கி போலீசார் தாக்குதல் நடத்தியதில், இருவர் உயிரிழந்ததாகவும், 80 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.