ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல், கல்லூரி மாணவியை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அரக்கோணம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ரவியிடம் மாணவி முறையிட்ட பிறகே எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 20 பெண்கள் தி.மு.க. நிர்வாகியின் கொடூர பிடியில் சிக்கி இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி கூறியிருப்பதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, இது குறித்து விசாரித்து தி.மு.க. நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
“யார் அந்த தம்பி” என்ற ஹேஷ்டேக் உடன் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.