டாஸ்மாக் ஊழல் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது நடந்து வரும் அமலாக்கத்துறை சோதனைகளுக்கு, அடிப்படையாக உள்ள தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள 40க்கும் மேற்பட்ட மூல வழக்குகளை போதிய ஆதாரமில்லை என்று கூறி வழக்கை முடித்து, அரசு டாஸ்மாக்கில் நடந்த ஊழலை மறைக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியிருப்பததுடன், இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.