இதில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். அடுத்த ஆண்டு தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான வியூகங்கள், செயல் திட்டங்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.