சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் இந்த ஆண்டிற்கான முதற்கட்ட கல்வி விருதுகளை கடந்த மே 30ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக இன்று திருச்சி, ஈரோடு, கரூர், தஞ்சாவூர் ராமநாதபுரம் திருப்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 75 தொகுதிகளை சேர்ந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர். அதேபோல புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 9 தொகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகளையும் விஜய் கௌரவிக்க உள்ளார்.