``அந்த கூட்டணி எந்த நேரத்திலும் உடையலாம்’’ - கொளுத்தி போட்ட KTR

Update: 2025-04-23 03:20 GMT

பாஜக- அதிமுக கூட்டணியை பார்த்து திமுகவினர் பதற்றம் அடைந்திருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து, விருதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்ததால் மக்கள் மனதில் பிரளயம் ஏற்பட்டதும், திமுகவினருக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது என்றார். திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள், சூழ்நிலை கைதியாகவே இருப்பதால், அந்த கூட்டணி எந்த நேரத்திலும் உடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்