சீமான் தொடர்ந்த வழக்கில் இன்று முக்கிய உத்தரவு?

Update: 2025-03-14 05:24 GMT

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி சீமான் தலைமையில் நடைபெறவுள்ள பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருப்போரூரில் மார்ச்16ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு திட்டமிடப்பட்டது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்