Rahul Gandhi vs Modi | டெல்லி குடியரசு தின விழாவில் ராகுலுக்கு என்ன நடந்தது? - வெடிக்கும் பூதாகரம்
குடியரசு தின விழாவில் ராகுல், கார்கே பின்வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டதால் காங்கிரஸ் கண்டனம்
டெல்லி குடியரசு விழாவில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பின்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தியை பின் இருக்கையில் அமர வைப்பது கீழ்த்தரமான அரசியல் என காங்கிரஸ் கூறியுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியின் போது எதிர்க்கட்சித் தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி மற்றும் எல்.கே. அத்வானி முன் இருக்கையில் அமர வைக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் விளக்கமளித்துள்ளது.
இதற்கு முன் கடந்த 2018 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளிலும் இதே போல் ராகுல் காந்திக்கு முன் வரிசையில் இருக்கையில் ஒதுக்கப்படாமல் இருந்த போதும் இது போன்ற சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.