DMDK | BJP | ஆளுநர் மாளிகையில் விருந்து.. நீண்ட நேரம் தனியாக பேசிய முக்கிய புள்ளிகள்..
குடியரசு தினத்தை ஒட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில், அரசியல் கட்சித் தலைவர்கள் ஆங்காங்கே தனித்தனியே ஆலோசனை நடத்தியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்று தேமுதிக இன்னும் அறிவிக்காத நிலையில், தேநீர் விருந்திற்கு வந்திருந்த தேமுதிக பொருளாளர் சுதீஷை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தனித்தனியாக அழைத்துச் சென்று நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். தேநீர் விருந்து முடிந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நயினார் நாகேந்திரன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர், மரியாதை நிமித்தமாகவே சந்திப்புகள் நடந்தன என்று தெரிவித்தனர்.