PMK Anbumani | ``அதெப்படி முடியும்; இதெல்லாம் ஏமாத்து வேலை’’ - எதிர்த்த அன்புமணி.. சொன்ன அந்த காரணம்

Update: 2026-01-04 02:46 GMT

தமிழக அரசின் ஓய்வூதியம் அறிவிப்பு ஏமாற்றுவேலை - அன்புமணி. தமிழக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அரசு ஊழியர்களை ஏமாற்றும் செயல் என அன்புமணி சாடியுள்ளார். முதலமைச்சர் அறிவித்துள்ள திட்டத்தில் ஓய்வூதியம் பெறுவதற்கான பணிக்காலம் மற்றும் எவ்வளவு தொகை என்பதை தெளிவாக குறிப்பிடவில்லை என சுட்டிக்காட்டியுள்ள அன்புமணி ராமதாஸ், திட்டத்தை செயல்படுத்த ஓய்வூதிய நிதியத்திற்கு 13,000 கோடி ரூபாய் தேவைப்படும் சூழலில், ஆட்சி முடியும் நிலையில் திமுக அரசும் எப்படி வழங்கமுடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்