கனடா பிரதமர் தேர்தலில் லிப்ரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மார்க் கார்னி வெற்றி பெற்றுள்ள நிலையில், அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டு இருப்பதும், அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருப்பதும் இந்தியா மற்றும் கனடா இடையேயான உறவில் மீண்டும் மறுமலர்ச்சி ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது . இதன் மூலம் காலிஸ்தான் பிரச்சனைக்கும் விரைவில் தீர்வு எட்டப்படும் என்றும் நம்பப்படுகிறது.