மாணவர்கள் உரிமையையும், பல்கலைகழக அதிகாரத்தையும் பறிப்பதற்கு மத்திய அரசு அறிவித்துள்ள புதிய வரைவு நெறிமுறைக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். நாகை மாவட்டம் திருமருகல் பகுதியில் உள்ள கணினி மையத்தில் பல்கலைகழக யூஜிசி க்கு எதிர்ப்பு தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகம் கல்வியில் முதலிடம் பிடிக்கும் மாநிலம் என்பதால் அந்த வளர்ச்சியை பொறுக்க முடியாமல் மத்திய அரசு செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.