"அரசியல் சந்திப்புகள் நடைபெறாத மோடியின் பயணம்" - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு

Update: 2025-04-07 02:03 GMT

பிரதமர் மோடியின் தமிழக வருகையின்போது, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர் யாரையும் சந்திக்காமல் டெல்லி புறப்பட்டுச் சென்றார். தமிழகம் வரும் பிரதமர் மோடியை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. மேலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், இந்த பயணத்தின்போது, அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் யாரையும் சந்திக்காமல் மோடி புறப்பட்டுச் சென்றது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்