Chennai Protest | மத்திய அரசை கண்டித்து சென்னையில் நடந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சத்திஸ்கர் மாநிலத்தில் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து நக்சல்களை ஒழிப்பதாக கூறி பழங்குடி மக்களை சுட்டுக்கொல்லும் நடவடிக்கையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மாஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், முத்தரசன், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராகவும், சத்தீஸ்கர் மாநில அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், நக்சல்களுக்கு எதிராக மத்திய அரசு நடத்தும் அழித்தொழிப்பு கொள்கை கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.