"இந்தியாவை பிரபலப்படுத்துவதில் இந்திய சினிமா வெற்றி பெற்றுள்ளது" - பிரதமர் மோடி நெகிழ்ச்சி
``இந்தியாவை பிரபலப்படுத்துவதில் இந்திய சினிமா வெற்றி பெற்றுள்ளது"
இன்று இசை மற்றும் இசை கச்சேரிகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவாகி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு மையத்தில் நாட்டின் முதலாவது வேவ்ஸ் - உலக ஒலி – ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்திய திரையுலகைச் சேர்ந்த ஏராளமான திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கடந்த நூற்றாண்டில் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இந்தியாவைப் பிரபலப்படுத்துவதில் இந்திய சினிமா வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார். ரஷ்யாவில் ராஜ் கபூரின் புகழ், கேன்ஸில் சத்யஜித்ரேயின் புகழ் மற்றும் ஆஸ்கார் விருதுகளில் RRR இன் வெற்றி ஆகியவற்றிலிருந்து இந்த வெற்றி வெளிப்படுவதாக பிரதமர் மோடி கூறினார்.