Durai Vaiko | ``கூடுதல் சீட் கேட்க ஆசை இருக்கு.. ஆனால்..’’ மனம் திறந்து துரை வைகோ கொடுத்த பேட்டி
``கூடுதல் சீட் கேட்க ஆசை இருக்கு.. ஆனால்..’’ மனம் திறந்து துரை வைகோ கொடுத்த பேட்டி
கூடுதல் சீட் கேட்க வேண்டும் என்ற ஆசை உள்ளது - துரை வைகோ
கட்சிக்கு அங்கீகாரம் பெற வேண்டும் என்பதற்காக கூடுதல் சீட் கேட்க வேண்டும் என்ற ஆசை தங்களுக்கு உள்ளதாக, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் 12 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றால் தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்றார். இதனால், தங்களது ஆசைகளை, கருத்துக்களை பொதுக்குழுவில் கூற உள்ளதாக தெரிவித்த துரை வைகோ, எத்தனை தொகுதிகள் கேட்க வேண்டும் என்பதை தலைமை தான் முடிவெடுக்கும் என்றார். மேலும், கூட்டணியின் பொது நோக்கத்திற்கு எந்த பாதகமும் வந்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு முடிவெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.