OPS | TN Politics | தமிழகம் வரும் அமித்ஷா.. தேதியை குறித்து.. திடீரென முடிவை மாற்றிய ஓபிஎஸ்..

Update: 2025-12-13 11:48 GMT

கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டபோது, டிசம்பர்15ம் தேதி முக்கிய முடிவு எடுக்க இருப்பதாகவும், அது அரசியல் ரீதியான அடுத்தக்கட்ட பயணமாக இருக்கும் என்றும் பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரை சந்தித்தார். இதனைத்தொடர்ந்து, வரும் 15ம் தேதி அறிவிக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அமித்ஷா விரைவில் தமிழகம் வரவுள்ள நிலையில், அதன்பின்னர் இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்