EPS | AIADMK | "புதிதாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம்.." - விஜய்யை அட்டாக் செய்த EPS
புதிதாக கட்சி தொடங்கியவர்களும் அதிமுகவை விமர்சிக்கிறார்கள் என்று, எடப்பாடி பழனிசாமி தவெகவை மறைமுகமாக சுட்டிக் காட்டி பேசினார்.
திருத்தணியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தின் கடனை 5 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தியதுதான், திமுக ஆட்சியின் சாதனை என்று தெரிவித்தார். அதிமுக ஆட்சி அமைந்தால் மிக்சி- கிரைண்டர், மினி கிளினிக், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார். உள்ளாட்சி அமைப்புகளில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.