அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தண்டையார்பேட்டையில் 71 தண்ணீர் பந்தல்களை
அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் திறந்து வைத்தார். நிகழ்வில், ஆர் கே நகர், பெரம்பூர் இரண்டு தொகுதிகளைச் சேர்ந்த வட்ட மற்றும் பகுதி செயலாளர்களும் அவருடன் சேர்ந்து தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தனர். இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.