CM Stalin | Madurai | மதுரையில் முதல்வர் ஸ்டாலின் `Road Show' அறிவிப்பு
மே 31ல் மதுரையில் முதல்வர் ஸ்டாலின் 'ரோடு ஷோ'
முதலமைச்சர் ஸ்டாலின், வரும் 31ஆம் தேதி மதுரையில் ரோடு ஷோ நடத்த உள்ளார். மே 31 ஆம் தேதி பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், அன்று மாலை ரோடு ஷோ நடத்த உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஜூன் 1ஆம் தேதி மதுரை உத்தங்குடியில் நடக்கும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 3 ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.