மும்பை மேயர் பதவிக்கு பாஜக மற்றும் ஷிண்டே தரப்பிலான சிவசேனாவுக்கு இடையே இழுப்பறி நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவை சேர்ந்தவர்கள் அல்லாதவர்களே மேயர் பதவி வகிக்க வேண்டும் என்று புதிதாக வென்றுள்ள மாநகராட்சி உறுப்பினர்கள் விரும்புவதாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மேலும், அவர் மும்பை மேயராக தங்கள் கட்சியை சேர்ந்தவரே பொறுப்பேற்பார் என்றும் கூறியிருக்கிறார். மேலும் துணை முதலமைச்சர் என்ற போதும் கட்சித் தாவலுக்கு பயந்து தனது தரப்பிலான 29 உறுப்பினர்களை ஏக்நாத் ஷிண்டே தாஜ் ஹோட்டலில் அடைத்து வைத்திருப்பதாகவும், அவர்களை உடனடியாக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் விடுவிக்க வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார்.