தவெக மாவட்ட செயலாளர் விஜய் அன்பன் கல்லாணை சார்பில் பொங்கல் பரிசு
பொங்கல் விழாவை முன்னிட்டு, தவெகவின் மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகத்தினர் பொதுமக்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுகளை வழங்கி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, தவெக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் விஜய் அன்பன் கல்லாணை தலைமையில் மதுரையின் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழாக்கள் நடைபெற்றன. வில்லாபுரத்தில் கோலப் போட்டிகள் நடத்தப்பட்டு 200 பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.